November 21, 2024

சீனா என்றால் பம்மும் டக்ளஸ் இந்தியாவென்றால் பாய்கிறார்!

இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகளை விடும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சீனாவின் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன் என அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சின் ஸ்தாபகர் அ.ஜெயந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அ.ஜெயந்திரன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளர்.

சீனா நாட்டவரின் நடவடிக்கையைப் பார்த்தால் எங்கள் வீட்டு வாசலிலும் வந்து நிற்பார்கள் போலும் என்று அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கச்சியின் தலைவர் அருள்.ஜெயந்திரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜெயந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

அரியாலையில் கடல் அட்டை குஞ்சை வளர்த்து பூநகரி கடலில் கடல் அட்டையை வளர்ப்பதற்காக கொண்டுபோய் விடுகிறார்கள்.

வெளிநாட்டவர் எமது கடலில் கடல் அட்டையை வளர்த்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி என்றால் எமது மக்களுக்கு ஏன் அனுமதி மறுப்பு.

வடமாகாணத்தில் சீனர்களின் கடல் அட்டை வளர்ப்பு தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஷ் தேவானந்தா மெளனம் காப்பது ஏன். ஆளுமையுடைய தமிழ் தலைவனாக இருந்தால் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல்அட்டை வளர்ப்பில் எங்களுடைய மக்களும் செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும்.

முன்னைய காலங்களில் எமது மக்கள் கடல்அட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 16 அரசியல் கைதிகளை விடுதலை செய்த அரசுக்கு நன்றியை தெரிவிப்பதுடன், சிறையில் வாடும் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இங்கு உள்ளவர்களும் புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.