November 21, 2024

அம்பலமானது டக்ளஸின் தம்பி தயானந்தா கம்பனி

 

தனது தம்பி தயானந்தா பேரில் வடக்கில் கடலை வளைத்துப்போடும் டக்ளஸின் கைகங்கரியம் அம்பலமாகிவருகின்றது.

ஏற்கனவே தீவக மீனவர்களை மிரட்டி தீவக கடலில் பல கடலட்டை பண்ணைகளை டக்ளஸ் தொடங்கிய போதும் உள்ளுர் மீனவ அமைப்புக்களது குரல் பலவீனமாக இருந்தே வந்திருந்தது.

இந்நிலையில் பூநகரி பக்கமும் சீன கூட்டுடன் கடை விரிக்கும் டக்ளஸின் கூட்டு அம்பலமாகியுள்ளது.

இதனை பற்றி விபரித்துள்ள தகவலாளர் ஒருவர்

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் Guilan Sea Cucumber Hatchery & Farm என்கிற பெயரில்  நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கடலட்டை பண்ணையை உருவாக்கி இருந்த சீன நிறுவனம்

தற்போது கிளிநொச்சி பூநகரி கெளதாரி முனை கடற்பரப்பில் மற்றுமொரு கடலட்டை பண்ணையை நிறுவி  இருக்கின்றது.

இதன் பிண்ணனியில்  அரசியல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது

குறிப்பாக கடற்தொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அனுசரணை குறித்த சீன நிறுவனத்திற்கு இருக்கும் விடயம் அமபலப்படுத்தபட்டு  இருக்கின்றது

குறிப்பாக  இந்த  சீன நிறுவனத்தின் முகாமையாளராக டக்ளஸ் தேவானந்தாவின் EPDP அமைப்பை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் திரு கணேஷ் என்பவர் நியமிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் தெரியவந்து இருக்கின்றது

இது  தவிர, குறித்த சீனர்களின் பண்ணைக்கு டக்ளஸ்  தேவானந்தா அவர்களும் பயணம் செய்த விடயங்கள்  வெளியாகி இருக்கின்றன

இவ்வாறு அரசியல் துணை கொண்டு   உருவாக்கப்பட்டுள்ள சீனர்களின் கடலட்டை பண்ணை இலங்கை கம்பெனிகள் சட்டத்தின் கீழ் Guilan Sea Cucumber Hatchery & Farm என்கிற பெயரில்  பதிவு செய்து இருக்கின்றார்கள்.

இது போதாதென்று  குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக சீனாவை சேர்ந்த  சிச்சாவே லீ, யுவான் சென் ஆகிய இரு சீனர்களை நியமித்து இருக்கின்றார்கள்.

அதே போல நீர்கொழும்பை சேர்ந்த தம்மிக்க டி சில்வா என்கிற சிங்களவர் ஒருவரின் பெயரும் பணிப்பாளராக குறிப்பிடப்பட்டு இருக்கின்றது

உண்மையில் கடல் அட்டை பண்ணைகளை தொழில்துறையாக உருவாக்குவதற்கான அனுமதிகளை வழங்குமாறு தமிழ் மீனவர்கள் கோரி வருகின்ற போதும்  இதற்கான அனுமதிகளை கடற்தொழில் அமைச்சு நீண்டகாலமாக வழங்குவதில்லை

குறித்த பண்ணைகளுக்கான முதலீடு செய்ய முன்வரும் தமிழ் மீனவர்களின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் இலங்கை கடற்தொழில் அமைச்சு தயாராக இல்லை

அதே போல முதலீடு செய்ய விரும்பும் தமிழ் மீனவர்களுக்கான நிதி  வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள்  என எந்த  உதவிகளையும் கடற்தொழில் அமைச்சின் நிறுவனங்கள் செய்ய தயாராக இல்லை

கடந்த 10 ஆண்டுகாலமாக  குறித்த கடலட்டை பண்ணைகளுக்கான அனுமதிகள் தென்நிலங்கை மீனவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது  சீன இலங்கை கூட்டு நிறுவனங்கள் என்கிற பெயரில் சீனர்களுக்கு அனுமதிகளை வழங்குகிறார்கள்

குறித்த பகுதிகளை பூர்விகமாக கொண்ட தமிழ் மீனவர்கள் தஙக்ளுக்கு அனுமதி தருமாறு கோருகின்ற போதும் அதை மறுத்து தென்னிலங்கை மீனவர்களுக்கும் சீனர்களுக்கும் அனுமதி வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது ?

ஆனால் இதையும் நியாயப்படுத்துகின்றார்கள்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவராக இருக்கும் அங்கயன் இராமநாதன் என்பவர் குறித்த பண்ணைகளுக்கான அனுமதி தமிழ் மீனவர்களுக்கு தான் முதலில் வழங்கப்பட்டது என  பொய் சொல்லுகிறார் .

தமிழ் மீனவர்கள் குறித்த பண்ணைகளை நிறுவ முன்வராத காரணத்தினால் தான் பண்ணைகள் சீனர்களுக்கு வழங்கப்பட்டது என்கிற தோரணையில் அரசாங்கத்தின்  நிலைப்பாடுகளை நியாயப்படுத்த முயற்சிக்கின்றார்

கடந்த பல வருடங்களாக   கடலட்டை பண்ணைகளுக்கு மேலதிகமாக சாலை, கொக்கிளாய்,முல்லைதீவு, வடமராட்சிக் கிழக்கின் சுண்டிக்குளம்,  கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை, மருதங்கேணி, தாளையடி என வடக்கு மாகாணத்தின்  பல்வேறு பகுதிகளில் கடலட்டை பிடிப்பதற்காக தென்னிலங்கை மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் சாலை கடற்பரப்பில் 2019 ஆம் ஆண்டு மட்டும் பருவ காலத்தில் கடற்தொழில் செய்வதற்கு தென்னிலங்கையை சேர்ந்த 26 மீனவ முதலாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் கடற்தொழில் திணைக்களத்தால் அனுமதி வழங்கி இருந்தது.

2018 ஆம் ஆண்டு பருவகாலத்தில் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்கள், 500க்கும் அதிகமான படகுகளில்,  வடமராட்சிக் கிழக்குக் கடலில் கடலட்டை பிடித்தனர் .

இவ்வாறு கடற்தொழில் அமைச்சின் உதவியுடன் வருபவர்களுக்கு கடற்கரையில் இருந்து 5 KM இற்கு அப்பாலான கடலில் மட்டும் தான் கடலட்டை பிடிக்க அனுமதி உண்டு.

ஆனால்  தென்னிலங்கை மீனவர்கள் 2 KM இற்கு உட்பட வடக்கு மாகாண கடலில்  கடலட்டை பிடித்த சம்பவங்கள் கூட நடந்தது

ஆனால்   தென்னிலங்கை மீனவர்களும்  சரி தற்போது புதிதாக உள்நுழையும் சீனர்களும் சரி இவர்கள் யாரும் வடக்கில் இயங்கும் உள்ளுராட்சி நிறுவனங்களில் அனுமதிகளை பெறுவதில்லை .

இந்த சம்பவங்களால் பாதிக்கப்படும் அப்பாவி மீனவர்கள் குரலற்றவர்களாக இருக்கிறார்கள்

உண்மையில் மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை வரை பார்த்தால் கிட்டத்தட்ட 900 கிலோமீற்றர் வடக்கு கிழக்கு சார்ந்த கடல் பிரதேசமாக இருக்கிறது

உலகப்பிரசித்தி பெற்ற மீன்பிடி மேடை (Petro bank) எங்களுடைய  கையில் தான் இருக்கின்றது.

பருத்தித்துறையில் இருந்து கிழக்கு பக்கம்  200 கிலோமீற்றர் முல்லைத்தீவு  வரை நாங்கள் ஆழ்கடல் தொழில் செய்யமுடியும் .

ஆனால்  கடல் வளம் சம்பந்தமான அதிகாரங்களை கொண்ட கடற்றொழில் அமைச்சு என்பது மத்திய அரசின் கீழ் தான் இருக்கின்றது.

அதிகாரம் அவர்களுடைய கையில் இருப்பதால்  இந்த வளப்பயன்பாடு எங்களுடைய கரையில் இருக்கின்ற மக்களைவிட தென்பகுதி மக்களுக்கும்  இந்திய மீனவர்களும் தற்போது சீனர்களும்  தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலை இருக்கிறது

இந்த கொடூரங்களுக்கு டக்ளஸ் தேவானந்தா முதல் அங்கயன் இராமநாதன் வரையான தமிழ் தரப்புகளும் துணை நிற்கின்றார்கள்