பெற்றோல் பஞ்சம்:சைக்களிற்கு தாவினார் மாவை!
கொழும்புக்கு ஈடாக உள்ளுரிலும் அரசியல் கோமாளித்தனங்களை அரங்கேற்றுவதில் தமிழரசுக்கட்சிக்கு நிகர் அந்த கட்சியே.
எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்தும் மக்களுக்கு அதிகரிக்கப்படும் கடன் சுமையை நீக்கக் கோரியும் சுகாதார துறையினரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் இன்று தமிழரசு ஏற்பாட்டில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
இன மத பிரதேச வேறுபாடு இன்றி தடுப்பூசிகளை வழங்கக் கோரியும் பாகுபாடின்றி 5000 ரூபா கொடுப்பனவை வழங்கக் கோரியும் ஏனைய அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க கோரியும் வலிதென்மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசியம் சார்ந்த கட்சி உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட கண்டன சைக்கிள் பேரணி இன்று கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ,ஈஸ்வரபாதம் சரவணபவன் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே கொழும்பில் மக்கள் சக்தி முச்சக்கரவண்டிகளில் பயணித்திருக்க கூட்டமைப்பின் முன்னாள்கள் யாழில் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர்.
ஏறினால் பஜிரோ இறங்கினால் ஹோட்டலென இருந்தவர்களது பரிதாப வாழ்வு கண்டு நெட்டிசன்கள் கலாய்த்து தொங்கவிட்டு வருகின்றனர்.