யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை.?
பருத்தித்துறை – மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக புகைப்படம் ஒன்றுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிவிட்டுள்ளார்.
அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
.