அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.ரி.ஏ) கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.இது தொடர்பில் சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று (28) அறிவித்தார்.
மார்ச் 9ஆம் திகதியன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.