März 28, 2025

மன்னாரில் 1,363 கிலோ கிராம் மள்சள்!! ஒருவர் கைது!

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை  கடற்கரை பகுதியில், இன்று (24) அதிகாலை 1 கிலோ 363 கிராம் உலர்ந்த மஞ்சல் கட்டி மூடைகளுடன், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சிலாவத்துறை – அல்லிராணி கோட்டைக்கு மேற்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில், சிலாவத்துறை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 26 மூடைகளில், பொதி செய்யப்பட்டிருந்த 1,363 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கட்டிகளை கைப்பற்றினர்.

சந்தேகநபர்களிடம் இருந்து, படகும் படகின் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.