November 21, 2024

கிளிநொச்சியில் ஆமி ஊசி:வெள்ளவத்தையில் புதிய வைரஸ்!

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவென இலங்கை இராணுவத்தினரிடம் இருந்த சைனோபாம் தடுப்பூசிகளை 2100 பணியாளருக்கு ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொழும்பு மாவட்டத்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டிய மற்றும் கொம்பத்தெரு ஆகிய பிரதேசங்களிலேயே புதிய வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தையில் 58 பேரும், கொம்பனித்தெருவில் 23 பேரும், நாரஹேன்பிட்டியவில் 21 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்றுக்காலை 6 மணியுடன் நிறைவடைந்த, 24 மணிநேரத்தில், நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2,196 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பிய இலங்கைப் பிரஜைகள் 18 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.