கனடாவில் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் பதவியேற்றுள்ள இந்திய வம்சாவழி கனேடியர்கள்


ஒன்ராறியோ மாகாண முதல்வர் கடந்த வெள்ளியன்று தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார். இதேவேளை ஏற்கனவே இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவழி கனேடியரான Prabhmeet Sarkariya என்னும் எம்பிபி , சிறு வர்த்தகம் சார்ந்த அமைச்சில் துணை அமைச்சராக பதவி வகித்தார்.
அவர் தற்போது Treasury Board எனப்படும் நிதிச் சபையின் இன் தலைவராக பதவி யேற்றுள்ளார். மேலும் முன்னாள் மத்திய பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மாகாண பாராளுமன்ற உறுப்பினருமான Parm Gill என்னுயும் எம்பிபி மாகாணத்தின் குடியுரிமை மற்றும் பல்லின கலாச்சார அமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் , தற்போது ஒன்ராறியோ மாகாண அமைச்சரவையில் மூன்று இந்திய வம்சாவழி கனேடியர்கள் அமைச்சர்களாக பதவி வகிப்பதும் இதே போன்று இலங்கை வம்சாவழி கனேடியரான விஜய் தணிகாசலம் ஒன்றாரியோ போக்குவரத்து அமைச்சின் பாராளுமன்றச் செயலாளராக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
(செய்தி:-சத்தியன்)