März 29, 2025

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடலொன்று நேற்று (21) இடம்பெற்றது.

சுமார் அரை மணித்தியாலம் இடம்பெற்ற இந்த உரையாடலின் போது, இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை விஸ்தரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவி மற்றும் கொவிட்-19 தடுப்பு நிவாரணம் ஆகியவற்றுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதன்போது குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சீன துறைமுக நகர செயற்திட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.