März 28, 2025

24 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! கைது செய்ய நடவடிக்கை!!

இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள 24 பேரைக் கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இவர்களுள் 13 பேர் போதைப் பொருள் மற்றும் பாதாளக்குழு உறுப்பினர்கள் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த 24 பேரில் இருவர் தற்சமயம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.