November 25, 2024

இந்திய கடற்படை சுத்த தங்கம்!

இலங்கை மீனவர் எவரையும் வடக்கு கடற்பரப்பில்; இந்திய கடற்படையினர் தாக்கவில்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இலங்கை மீனவர்களிடம் இந்திய கடற்படையினர் போதை பொருள் கேட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.

நீர்கொழும்பு பகுதியில் இருந்து வடக்கு ஆழ் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் இந்திய கடற்படையினால் தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை மீனவர்களது படகிற்கு அருகில் சென்ற இந்திய கடற்படையினர் ,; படகினுள் ஏறி ,போதைப்பொருள் கேட்டு மிரட்டியள்ளனர். மீனவர்கள் தம்மிடம் போதை பொருள் இல்லை என கூறிய போது மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , அவர்களின் படகில் இருந்த உபகரணங்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அதனை மறுதலித்துள்ளது.

இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அனைத்தும் முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பானவையாகும்.

இவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெற்றவில்லை என நாம் மிகவும் உறுதியாக தெரிவிக்கின்றோம்.

மிகவும் உயர்ந்த ஒழுக்கத்தையும், தொழில்திறனையும் கடைப்பிடித்து வரும் இந்திய கடற்படை குற்றமற்ற வகையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றதென தெரிவிக்கப்பட்டு;ள்ளது.