November 22, 2024

ஈழம் சிவசேனைக்கும் நெருக்கடி?

 

சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் விசாரணைக்குள்ளாக்கப்பட்டமை தொடர்பில் இந்து அமைப்புக்கள் பலவும் போர்க்கொடி தூக்கியுள்ளன.சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாதத் தடைப் புலனாய்வுப் பிரிவினர் நேற்;று வியாழக்கிழமை இரண்டு மணி நேரம் விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருந்தார்.

தயாரித்துக் கொண்டு வந்திருந்த வினாக்கொத்து ஒன்றினைக் கொண்டு 22 இற்கும்  கூடுதலான வினாக்களைத் தொடுத்தனர். விடைகளைப் பதிந்து சென்றனர்.

சிவசேனை அமைப்புக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை அமைந்தது.

இதுவரை காலம் சிவசேனை வெளியிட்ட நூல்கள் தட்டிகள் சுவரொட்டிகள் யாவற்றையும் ஒவ்வொன்றாகக் காட்டிய மறவன்புலவு க.சச்சிதானந்தன் ஒவ்வொரு படியை எடுத்துச் செல்லுமாறு அவர்களுக்குக் கொடுத்த போது அவற்றின் படங்கள் தம்மிடம் இருப்பதாக கூறி எடுத்துச்செல்ல மறுத்து விட்டனர்.

பசுவதைத் தடைச் சட்டக் கோரிக்கை தொடர்பாக இதுவரை சிவசேனை நடத்திய போராட்டங்கள் யாவற்றையும் விளக்கமாகக் கேட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இந்து அமைப்புக்கள் பலவும் விசாரணை தொடர்பில் போர்க்கொடி தூக்கியுள்ளதுடன் கண்டனத்தை வெளியிட்டுவருகின்றன.