November 22, 2024

மடுவுக்கு கட்டுப்பாடு இல்லையா?

இலங்கை முழுவதும் கொரோனா தலைவிரித்தாடும் நிலையில் நாட்டில் மத வைபவங்கள், திருவிழாக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது பிற்போடப்பட்டுள்ளன. ஆனால் மடுத் திருத்தலத்திற்கு மட்டும் பெருந்திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

பௌத்தர்களின் தேசிய வெசாக் வைபவத்தை இம்முறை யாழ்ப்பாணத்தில் பெருமெடுப்பில் நடத்த உத்தேசிக்கப்பட்ட நிலையில் அது நிறுத்தப்பட்டது.

நயினாதீவு பெருந்திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று நாட்டில் சிறியதும் பெரியதுமான பல இந்து ஆலயங்களின் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சட்டத்தை மீறி கொடியேற்றிய இந்து ஆலயங்களின் நிர்வாகிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். சில ஆலயங்களில் திருவிழாக்களின்போது கொரோனா தொற்றாளர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மன்னார் மடுத்திருத்தலத்தில் மட்டும் எதிர்வரும் 2 ஆம் திகதி மட்டுப்படுத்தப்பட்ட அளவு பக்தர்களுடன் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஏனைய மதங்களை அவமதிக்கும் செயற்பாடாக அமையாதா? ஏன கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலுமிருந்தும் யாத்திரீகர்கள் மடு பெருவிழாவில் பங்கெடுக்கின்ற வகையில் சர்ச்சைகள் மூண்டுள்ளது.