அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து கோர விபத்து 25 பேர் பலி
ஏமனில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 25 பேர் பலியாகியுள்ளதுடன், 175 பேரின் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
அந்த வகையில் எத்தியோப்பியா மற்றும் சோமாலியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடல் வழியாக படகுகளில் சட்டவிரோதமாக பயணம் செய்து சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இவர்கள் ஏமன் நாட்டின் பாப் அல் மண்டாப் ஜலசந்தி வழியாக பயணித்து சவுதி அரேபியா செல்ல வேண்டியுள்ளது.
இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் சுமார் 200 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பாப் அல் மண்டாப் ஜலசந்தி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.