März 28, 2025

கப்பல் எரிவு:20வருடமெடுக்குமாம்!

தென்னிலங்கை கடற்பரப்பில் தீ பற்றிய  எம்.வி.எக்ஸ்-பிரஸ் பேர்ல்  கப்பலில் இருந்த கழிவு பிளாஸ்ரிக் துகள்கள் வடக்கு கடற்பரப்பை வந்தடைந்துள்ளது.

அவற்றின் மாதிரிகள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது.

கரை ஒதுங்கிய சிறிய உருண்டைகள் கடல் கரையோரப்பகுதிகள் முழுவதிலும் சிதறி கிடப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர என்பவர் தெரிவித்துள்ளார்.

கப்பல் மூழ்கியதால் ஏற்பட்ட சேதம், ஈடு செய்யப்பட வேண்டும் என்பதுடன் பொறுப்பான அனைவரையும் அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் எனவும் அரச அமைச்சர் தெரிவித்துள்ளார்.