November 21, 2024

இலங்கை முழுவதும் ஊசி போட 77 பில்லியன்!

சீனாவிலிருந்தான கொரோனா தடுப்பூசி கொள்வனவு ஊழல் தொடர்பில் தகவல்கள் வெளிவந்தவண்ணடுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக, இந்த வருடம் இலங்கைக்கு  77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக, அரச மருந்தாக்கற் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்பன 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவுகளை தற்போதே முன்னெடுத்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசிகள் பல டோஸ்கள் செலுத்தப்பட வேண்டுமென அந்த நாடுகள் நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஒரு தடவை ஊசியேற்ற 77 பில்லியனை ஒதுக்க வேண்டிய சூழலில் இலங்கை அதனை  எவ்வாறு எதிர்கொள்ளுமென்ற கேள்வி எழுந்துள்ளது.