November 22, 2024

காசு மேல காசு வந்து கொட்டுகின்ற காலமிது!

இலங்கைக்கு முன்னரே பங்களாதேஸ், சீனபோர்ம் தடுப்பூசியை கோரியது. ஆகவேதான் பங்களாதேஸிற்கு முன்னுரிமை“ என்றும், „விரைவில் இதில் உண்மை வெளிவரும்“ எனவும் சீன தூதரகம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனிற்கு பதில் வழங்கியுள்ளது.

இதற்கு முன் „சீனபோர்ம் தடுப்பூசியை, பங்களாதேசுக்கு 10 டொலருக்கு தந்து, இலங்கைக்கு 15 டொலருக்கு தந்தது ஏன்“ என் டுவீட்டரில் மனோகணேசன் எழுப்பிய கேள்விக்கு சீன தூதரகம் பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.

இதனிடையே „சீனபோர்ம் தடுப்பூசியை, பங்களாதேசுக்கு 10 டொலருக்கு தந்து, இலங்கைக்கு 15 டொலருக்கு தந்தமை பற்றி விளக்கமளித்துள்ள மூத்த மருத்துவ அதிகாரி கதிர்காம தொதல் வியாபாரம் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன அரசு முதலில் தந்த இலவசம் அத்தகையதே.முதலில் கவர்ந்திழுக்க இலவசம்.

தற்போது வழங்கப்பட்டுள்ள சீன ஊசியில் ஒன்றிற்கு இரண்டு டொலர் தரகு பணம் பற்றி ஊடக பரப்பில் பேசப்படுகின்றது.

இலங்கைக்கு இரண்டு கோடி தடுப்பூசி வேண்டும்.அதுவும் ஆறு மாதத்தின் பின்னராக மீள இரண்டாவது டோஸ் ஏற்றப்படவேண்டும்.

சிலவேளை அது மூன்று,நான்காவது டோஸ்களாக  நீடிக்கப்படலாம்.

ஒரு டோஸிற்கு இரண்டு டொலரென கணக்கு பார்க்க சொல்கிறார் அந்த மூத்த மருத்துவ அதிகாரி.