November 22, 2024

நிர்வாணப் படங்கள் கசிவு! மில்லின் டொலர்களை இழப்பீடாக வழங்கிய ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உரிமையாளர் ஒருவருக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு மில்லியன் டாலர் நஷ்டஈடு செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன் சேவை மைய நிர்வாகிகள் இரண்டு பேர் ஒரு பெண்ணின் ஐபோனை பழுது பார்த்தபோது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது பேஸ்புக் ப்ரொபைலில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் தி டெலிகிராப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கல்லூரி மாணவராக இருக்கும் அந்த ஐபோன் யூசருடன் ரகசியத்தன்மை பிரிவில் கையெழுத்திட ஆப்பிள் நிறுவனத்தை இந்த சம்பவம் தூண்டியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

„கடுமையான மன துன்புறுத்தல்“ காரணமாக மாணவரின் வழக்கறிஞர்கள் 5 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ.36 கோடி) நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக மூல அறிக்கை கூறினாலும், பாதிக்கப்பட்ட மாணவர் கோரிய சரியான நஷ்டஈடு தொகை குறித்து தெளிவான தகவல் இல்லை. இருப்பினும் இந்த டீல் ஒப்பந்த வழக்கு குறித்து ஆப்பிள் நிறுவனம் தி டெலிகிராப்பிற்கு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் நடத்திய முழுமையான விசாரணைக்கு பின்னர் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் சேவை மையத்தைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகளும் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஆப்பிளின் வழக்கமான உயர் தரமான சேவையில் ஒரு பிளாக் மார்க்கை உருவாகியுள்ளது. அந்நாட்டில் குப்பெர்டினோ என்ற மாபெரும் நிறுவனம் போன்களின் விற்பனைக்குப் பிந்தைய சேவையை தரமாக வழங்குவதில் வலுவான தடத்தை பதித்துள்ளது. இதற்காக இது உலகம் முழுவதும் பல ஒப்பந்தக்காரர்களைப் பணியாளர்களாக பயன்படுத்துகிறது.
இந்த குறிப்பிட்ட திட்டத்தில், ஆப்பிள் நிறுவனம் பெகாட்ரான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதில் தான் இப்போது நீக்கப்பட்ட இரண்டு நிர்வாகிகளும் பணிபுரிந்தனர். இதையடுத்து, இந்த சம்பவத்தில் பெகாட்ரான் நிறுவனத்திற்கு பங்கு இருப்பதன் காரணமாக பெண்ணுக்கு வழங்கிய முழு டீல் செலவையும் ஆப்பிள் நிறுவனத்திற்கு செலுத்தியதாக கூறப்படுகிறது.
சேவை மற்றும் பழுதுபார்ப்புக்காக ஐபோன்கள் கொண்டு வரப்படும்போது, பல சேவை மையங்கள் பெரும்பாலும் சாதனத்தின் கடவு சொற்களைக் கேட்கின்றன. அவை பழுதுபார்ப்பு மற்றும் சேவைகளுக்கு பங்கம் விளைவிக்கிறது. இருப்பினும், இது தொலைபேசியில் உள்ள தனிப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆபத்தும் அதிகரிக்கிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 10 புகைப்படங்களையும் வீடியோக்களையும் பெண்ணின் ஐபோனில் பதிவேற்றியுள்ளனர். இது அவரை „பல்வேறு கட்டங்களில்“ அவதூறாக சித்தரித்துள்ளது. தனது கணக்கில் அசாதாரண செயல்பாடுகள் குறித்து ஐபோன் உரிமையாளரின் சகாக்கள் எச்சரித்தபோது தான் இந்த சம்பவம் குறித்து அவருக்கு தெரிந்தது.