ஆளாளுக்கு கீழே கொரோனா ஊசி!
யாழ்ப்பாணத்திற்கென ஒதுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியில் ஆளும் தரப்பு செய்யும் அரசியல் உச்சமடைந்துள்ளது.
ஆளாளுக்கு மருத்துவ அதிகாரிகளை கையினுள் போட்டவாறு ஒரு தொகுதி மருந்துகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
அரச அமைச்சர் ஒருவரோ கட்சி அலுவலகத்திற்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களிற்கு ஊசி வேண்டுமா ஊசியென விபரம் கேட்டமை மூலமே இது தெரியவந்துள்ளது.
இதனிடையே யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் 15 பேர் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதன்படி யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில்,ஒரு வயது, ஒன்றரை வயது மற்றும் 3 வயது பச்சிளம் குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 8, 9, 11, 14, 15 வயது சிறுவர்களுக்கும், 9, 10, 13, 14 சிறுமிகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படும் சந்தர்ப்பம் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.