November 21, 2024

இரகசியமாகத் திருமணத்தில் பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இரகசிய திருமண விழாவில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தனது காதலியான கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்து கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.முன்னணி நாளேடுகலான சன் அண்ட் மெயில், முக்கிய அரசு அதிகாரிகளின் அலுவலகங்கள் இல்லங்கள் உள்ள ஜோன்சனின் டவுனிங் தெரு அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோருக்கு கூட இது பற்றி அறிந்திருக்கவில்லை, விருந்தினர்கள் மிக குறைவான அளவிலேயே விழாவிற்கு அழைக்கப்பட்டனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இங்கிலாந்தில் திருமணங்களில் தற்போது 30 பேருக்கு மட்டுமே அங்கேற்கலாம் என்ற விதி உள்ளது. பிரதமர் ஜான்சன் மற்றும் சைமண்ட்ஸ் இருவரும் டவுனிங் தெருவில் உள்ள ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு, திருமணத்திற்கு முன்பே,  ஒரு வயது மகன் வில்பிரட் (Wilfred) உள்ளார்.

கொன்சர்வேடிவ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவராக இருந்த காலத்தில் சைமண்ட்ஸ் ஜான்சனை சந்தித்தார். அவர் இப்போது ஒரு கடல் பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார், சமீபத்தில் அவர் ஒரு முதல் பெண்மணியை போல தனக்கென்று, ஒரு பிரதெயாக மான முறையில், உதவியாளரை நியமித்ததாக கூறப்பட்டது.

வக்கீலான மெரினா வீலருடனான திருமணம் செப்டம்பர் 2018 அன்று விவாகரத்தானது. அவர்களுக்கு லாரா, மிலோ, காஸ்ஸி மற்றும் தியோடர் ஆகிய நான்கு வளர்ந்த குழந்தைகள் உள்ளனர்.

போரிஸ் ஜான்சன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்தபோது தனது முதல் மனைவி அலெக்ரா மோஸ்டின்-ஓவனைச் (Allegra Mostyn-Owen) சந்தித்தார், அவர்கள் 1987 இல் திருமணம் செய்து கொண்டனர். 1993 ஆம் ஆண்டில் விவாகரத்தானது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் வீலரை மணந்தார்.