März 29, 2025

இலங்கை: ஒருவர் மட்டும் செல்ல அனுமதியாம்!

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடு எதிர்வரும் நாட்களை பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் போது மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வீடுகளில் இருந்துஒருவர் மாத்திரமே சென்று வாங்குமாறு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா அறிவுறுத்தியுள்ளார்.

வாகனங்களில் செல்லாது நடந்து செல்லக்கூடிய தூரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கே செல்லவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பயணக்காட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலப்பகுதியில் வங்கிச் சேவை முன்னெடுக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஆளனியை கொண்டு முன்னெடுக்கவேண்டும்.

ஆடை விற்பனை நிலையங்கள், ஆடம்பர தேவைக்கான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட அனுமதியில்லை என பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

மரக்கறி, மீன்கடை, இறைச்சிக்கடை, அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும் கடைகளை திறப்பதற்கு மட்டுமே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதிக்கப்படும் என புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.