November 22, 2024

பின்கதவால் வருகின்றது கோடி வாகனங்கள்!

கோத்தா அனுமதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு ஆம்புலன்ஸ் என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்படவிருக்கும் 349 சொகுசு வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்த ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும், 50 ஆம்புலன்ஸ் இறக்குமதி என்ற போர்வையில் 349 சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களின் மொத்த இறக்குமதி வரி இல்லாமல் ரூ 350 கோடி செலவழிக்கப்படவுள்ளது. அவசர தேவைகளுக்காக 50 ஆம்புலன்ஸ் இறக்குமதி செய்யும் போர்வையில், 2755 சிசி 07 லேண்ட் க்ரஷர் பிராடோ 227, 6403 சிசி ஹினோ கேப்ஸ் 01, டொயோட்டா லேண்ட் குரூசர் 01 மற்றும் ஹிலக்ஸ் டபுள் கேப் 69 ஆகியவற்றுக்கு நிதிவசதிகள்  வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கியின் குத்தகை வசதியின் கீழ் இந்த நோக்கத்திற்காக ஏற்கனவே ரூ 3500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கு தேவையான கடன் கடிதத்தை கடந்த ஏப்ரல் 29 அன்று திறக்கப்பட்டது. நாட்டில் வேகமாக விரிவடைந்து வரும் கோவிட் ஒடுக்குமுறைக்கு அரசாங்கத்தால் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் இலங்கை முதலாளிகள் மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களிடமிருந்து உதவி கோரியதன் பின்னணியில் இந்த சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.