புதிய வரலாறு: குவேனியை மணந்த சீன இளவரசன்!
இலங்கை சீனலங்காவாக மாறி வருவது தென்னிலங்கையிலும் கொதிப்பு மனோநிலையினை தோற்றுவித்துவருகின்றது.
கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இலங்கை நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் குவேனியை விஜயன் திருமணம் செய்து இலங்கை வரலாற்று மாற்றத்தை தோற்றுவித்த வம்சக்கதையினை விஜயனிற்கு பதிலாகnசீன இளவரசன் கடலால்; வந்து குவேனியை மணந்ததாக கேலிச்சித்திரமொன்றை இன்று வெளியிட்டுள்ளது முன்னணி கொழும்பு இதழொன்று.
இன்னொருபுறம் கட்டுப்பாடுகள் இன்றி தனித்தநாடாகியுள்ள கொழும்புத் துறைமுக நகரத்திற்கு சீனர்கள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டை வெளியிட்டுள்ளது இன்னொரு கொழும்பு சிங்கள ஊடகம்.
இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழை புறந்தள்ளி சீன மொழிக்கு முக்கிய அந்தஸ்த்தினை வழங்கியுள்ளது துறைமுகநகரம் .