November 22, 2024

2022 ஆண்டு நிறுத்தப்படுகிறது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர்

இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை குறைந்தது. நாளடைவில் 1985ம் ஆண்டுக்குமேல் பிறந்தவர்கள் பயன்படுத்தும் பழைய பிரவுசராக இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் கருதப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் கூகுள் குரோம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.கணினி மொழி புரியாதவர்களுக்குக்கூட எளிதில் அவற்றைக் கற்பிக்கும் வகையில் எளிதாக வடிவமைக்கப்பட்டிருந்தது கூகுள் நிறுவனத்தின் குரோம். இதற்காகவே பலர் கூகுள் குரோம்-ஐ பயன்படுத்தி தேடலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளாக தாங்கள் உருவாக்கிய பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரை இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் செயல்படும். அதன்பின்னர் நிரந்தரமாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் சார்ந்த செயலிகள் மற்றும் இணையதளங்கள் 2029ஆம் ஆண்டுவரை செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இச்செய்தி இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.