November 21, 2024

இங்கிலாந்து இயல்பு நிலைக்கு திரும்புவதை உறுதி செய்கிறார் பிரதமர்

அடுத்த திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் உள்ளவர்கள் அன்புக்குரியவர்களைக் கட்டிஅரவணைத்து உட்புற விருந்தோம்பலை

அனுபவிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் கூறியுள்ளார். அத்துடன் ஆனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார். இங்கிலாந்தில் பூட்டுதல் விதிகளை மேலும் நீக்குவது பிரதமரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டவுனிங் ஸ்ரீட்டில் நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த மே 17 திங்கட்கிழமை வரவிருக்கும் மாற்றங்கள்

  • வெளிப்புறங்களில் குழுக்களாக (30பேர்) சந்திக்கலாம்.
  • இரண்டு வீட்டைச் சேர்ந்த 6 பேர் வீட்டில் சந்திக்கலாம்.
  • இரண்டு வீட்டைச் சேர்ந்த 6 பேர் ஒரு வீட்டில் தங்கலாம்.
  • மது அருந்தகங்கள், உணவகங்களின் உட்புறங்கள் திறக்கலாம்.
  • வயது வந்தவர்களுக்கான உட்புற விளையாட்டுகள், பயிற்சிகளை மீண்டும் திறக்கலாம்.
  • உட்புற பொழுதுபோக்குகளான அருங்காட்சியகங்கள், நாடக அரங்குகள், திரைப்படை அரங்குகள், சூதாட்ட விடுதிகள், உடற்பயிற்சி நிலையங்கள், விளையாட்டுக்கூடங்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள் மீண்டும் திறக்கப்படலாம்.
  • நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய நிகழ்வுகளை மீண்டும் தொடக்கம் செய்யப்படலாம் ஆனால் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் வரம்புகள் மட்டுப்படுத்தப்படும்.
  • வெளிப்புற அரங்குகள் மற்றும் சினிமாக்கள் போன்ற வெளிப்புற பொழுதுபோக்குகளை திறக்க முடியும்.
  • தங்குமிட விடுதிகள் மீண்டும் திறக்கப்படலாம்.
  • கொரோனா தொற்று குறைந்த (பச்பை பட்டியல்) வெளிநாடுகளில் விடுமுறைகள் அனுமதிக்கப்படுகின்றன.
  • 30 பேர் வரையில் திருமண நிகழ்வு மற்றும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளலாம்.