November 24, 2024

2வது ஸ்கொட்டிஷ் சுதந்திர வாக்கெடுப்வை நிராகரித்தார் பிரித்தானியப் பிரதமர்!

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஸ்கொட்டிஷ் சுதந்திரம் குறித்த இரண்டாவது வாக்கெடுப்புக்கான அழைப்பு நிராகரித்தார். ஐக்கிய இராச்சியத்தில் பெரும்பாலான மக்கள் இப்பொழுது வாக்குப்பதிவுக்கான நேரம் அல்ல என்று கருதுகின்றனர் எனக் கூறிய அவர்  நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றது என்றார்.சட்டப்பூர்வமாக  இரண்டாவது வாக்கெடுப்பை நடத்த ஸ்காட்லாந்திற்கு பிரித்தானிய அவரசாங்கத்தின் அனுமதி தேவை. அதற்கான அனுமதி பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பலமுறை நிராகரித்தார்.

நேற்றுப் புதன்கிழமை தனது எதிர்ப்பை மீண்டும் தெரிவித்தார். இங்கிலாந்தின் மற்ற பகுதிகளிலிருந்து ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதற்கான மற்றொரு வாக்கெடுப்பு பொறுப்பற்றதாக இருக்கும் என்றார்.

ஸ்காட்லாந்தில் உள்ள பெரும்பாலான மக்கள், இங்கிலாந்து முழுவதிலும் உள்ள பெரும்பாலான மக்கள் இதை உணர்கிறார்கள் என்று நினைக்கிறேன் . நாங்கள் ஒன்றாக ஒரு தொற்றுநோயிலிருந்து வெளியே வருகிறோம்.  இது பொறுப்பற்றதாக இருக்க வேண்டிய நேரம் அல்ல. இது பொறுப்பற்ற இரண்டாவது வாக்கெடுப்பு என்று நான் நினைக்கிறேன் என மிட்லாண்ட்   பயணத்தின் போதுஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கூறியுள்ளார்.