November 21, 2024

பிரிட்டனில் 50 வயதைத் தாண்டிய அனைவருக்கும் 3வது கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்தில் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலையுதிர்காலத்தில் மூன்றாவது கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இது கிறிஸ்மல்காவலத்தில் பரவக்கூடிய கொரோனா தொற்று நோயிலிருந்து வரும் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியாகும் என்று டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.இரண்டு திட்டங்களுக்கான  சோதனைகள் நடந்து வருகின்றன, இதனை இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி மேற்பார்வையிடுகிறார்.

முதலாவது, உருமாறிய கொரோனா தொற்றைத் தடுக்கக்கூடிய புதிய தடுப்பூசிகள் வழங்குவது.

இரண்டாவது, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா, மாடர்னா தடுப்பூசிகளை வழங்குவது.

பிரிட்டனில் மொத்தம் 34.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொவிட் -19  தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

67 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிரிட்டனில், எட்டு வெவ்வேறு COVID-19 தடுப்பூசிகளின் 510 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் உள்ளன.

ஃபைசர் தடுப்பூசியை பிரிட்டன் இன்னும் 60 மில்லியன் டோஸ் வாங்கும் என்று சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் கடந்த வாரம் கூறினார். இந்த ஆண்டு இறுதியில் நாட்டின் தடுப்பூசியின் விநியோகத்தை இரட்டிப்பாக்குகிறது.

மூன்றாவது தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பிரிட்டன் 100 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசியை வாங்குகின்றது.

இங்கிலாந்தில் கொரோனா தொற்றும் உயிரிழப்புகளும் குறைந்து வருவதால் அடுத்த மாதம் 21 ஆம் திகதியிலிருந்து சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் அகற்றப்படலாம் எனக் கூறப்படுகிறன்றது.