முன்கூட்டியே வாழ்த்தியதாக சொல்கிறார் சுரேன்!
தமிழக முதலமைச்சராகவுள்ள ஸ்ராலினிற்கு மாவை முதல் மனோகணேசன் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் தான் முன்னதாகவே வாழ்த்தி விட்டதாக தெரிவித்துள்ளார் முன்னாள் வடக்கு ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன்.
வட மாகாணத்தின் முதல் தமிழ் ஆளுநராக எனது 10 மாத குறுகிய காலப் பணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பாராளுமன்றத்தில் அங்கம்வகித்தும் 10 ஆண்டுகளாகக் அடையமுடியாத பல விடயங்களை என்னால் அடைய முடிந்தது.
2019 ஆண்டு, எனது அலுவலகத்தின் கடைசி வாரத்தில் ஒரு முக்கிய மைல்கல்லானது, 42 வருடங்கள் மூடப்பட்டிருந்த யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் விமானத்தை இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு எடுத்துச் செல்வதாக இருந்தது.
நாங்கள் கடுமையாக உழைத்து அதை ஒரு சர்வதேச விமான நிலையமாகவும், இந்தியாவிற்கும் ஸ்ரீ லங்காவிற்கும் இடையிலான விமானப் போக்குவரத்துக்காக மாற்றினோம்.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான எனது முதல் பயணத்தின் போது நான் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர். மு. க. ஸ்டாலினை சந்தித்தேன் அப்போது „நாங்கள் மீண்டும் சந்திக்கும் போது நீங்கள் தமிழக முதல்வராக இருப்பீர்கள்“ என்று அவருக்கு கூறினேன்.
மு.க. ஸ்டாலின் அவர்களுன் வெற்றி இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் குறிப்பாக வட மாகாணத்திற்கும் தமிழ்நாட்டுக்குமிடையில் சிறந்த மற்றும் உறுதியான நல்லுறவை கட்டியெழுப்பும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.