மண்ணைக் கவ்விய கணிப்புக்கள்! நோட்டாவுடன் போட்டிபோடும் அமமுக,தேமுதிக!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதன் முதலே திமுக தான் முன்னிலையில் உள்ளது. தற்போதும் அதே நிலை தான். 155 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக 78 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
அமமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய 2 கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. நாம்தமிழர் பல்வேறு இடங்களில் பத்தாயிரத்தடுக்கும் அதிகமான வாக்கு எடுத்து மூன்றாவது இடத்தில் இடம்பிடிக்கின்றது, அனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை உருவாக்கிய டிடிவி தினகரன், தேமுதிகவுடன் இணைந்து களம் கண்டார். தினகரன் களமிறங்குவது அதிமுகவின் வாக்கு வங்கியை சிதறிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள 9 தொகுதிகளில் 1000க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. கோவில்பட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் வெற்றியே கேள்விக் குறியாக உள்ளது.
அமமுக தான் இப்படி இருக்கிறது என்றால் அதனுடன் கூட்டணி சேர்ந்த தேமுதிகவுக்கும் இதே நிலை தான். விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் வெற்றியும் கேள்விக் குறியாக உள்ளது. டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதியில் நோட்டாவுக்கும் அமமுக வேட்பாளருக்கும் இடையே போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.