November 21, 2024

முளைக்கும் பொய் குற்றச்சாட்டுக்கள்:தொடங்கியது ஊடக முடக்கம்

எததகைய சமூக ஊடகங்களை முன்னிறுத்தி ஆட்சி பீடமேறினாரோ அவற்றினை முடக்க கோத்தா தயராகிவருகின்றார்.

இணையத்தளம் ஊடாக பரப்பப்படும் தவறான போலி தகவல்கள் மற்றும் திசை திருப்புவதுமான சிறு  தகவல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதென தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, நீதியமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ஆகியோர் கூட்டாக முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதென்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அமைச்சர்,இணையத்தளம் ஊடாக பரப்பப்புடும் தவறான தகவல்களால் பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாகவும் இது சமூகத்தை பிளவுப்படுத்தவும் ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தவும் வழி சமைப்பதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதென தெரிவித்த அவர், இதனால் சரியான செய்திகளை வழங்கும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதால், சிறந்த ஊடக கலாசாரத்தைப் பேணுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இதனைக் கருதலாம் என்றார்