November 21, 2024

அதிகாரத்தைப் பலப்படுத்தவே உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – பேராயர்

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.இன்று பொரளை மற்றும் மாதம்பிட்டி பொது மயானத்தில் உயிரிர்ந்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத் தூபி திறக்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டதாகும். அதனால் மதத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெறவில்லை. இலங்கையர் என்ற வகையில் நாம் வெட்கமடைய வேண்டும். எமது சுயநலத்திற்காக இன்னுமொரு மதம் , இனம் மற்றும் மொழியைச் சார்ந்தவரை நாம் துன்புறுத்தியுள்ளோம். தனது பலத்தை காண்பிப்பதற்காக இன்னெமொருவரை கொலைச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதேவேளை ஒரு மதம் , இனம் அல்லது மொழியைச் சார்ந்தவர்களுக்கு இடையூறு செய்வதையும் தவிர்த்ததுக் கொள்ள வேண்டும் என அவர் அங்கு மேலும் கருத்துரைத்துள்ளார்.