November 21, 2024

சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படக்கூடும் என்று உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா ஏஐ-906 என்ற விமானத்தை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது விமானத்தின் கடைசி இரண்டு கழிவறைகளில் வெள்ளைநிற டேப்பால் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்று இருப்பது தெரியவந்தது.

அதைப் பிரித்துப் பார்த்த போது, 583 கிராம் எடையில் வெளிநாட்டு முத்திரைகளுடன் 10 தங்க வெட்டுத் துண்டுகளும், 870 கிராம் எடையில் தங்கப்பசை அடங்கிய 6 பொட்டலங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தமாக ரூ. 65.38 லட்சம் மதிப்பில் 1.36 கிலோ தங்கம், கேட்பாரற்று இருந்ததாக சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.