November 25, 2024

தமிழ்நாட்டில் தேர்தல் வாக்களிப்பு நாளை ஆரம்பமாகின்றது

எமது மொழியின் பெயரில் இயங்கும் இந்த மாநிலத்தின் மக்களுக்கு ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நேர்மையான ஆட்சியை வழங்காக தமிழக அரசிற்கு முதலமைச்சரையும் சட்டசபை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு நாளை ஆரம்பமாகின்றது.
தமிழ் நாட்டு மக்களுக்குரிய அரசாக இருந்தாலும் இந்தத் தடவை ஈழத் தமிழர்களின் அரசியல் மற்றும் வாழ்வுரிமை பற்றியெல்லாம் ஒவ்வொரு கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடியால் இந்த தேர்தல் ஈழத் தமிழ் மக்களையும் தொடர்புபடுத்திக் காட்டப்படுகின்றது.
படங்களில் கலைஞர் கருணாநிதி, அவரது புதல்வி கனிமொழி சில வேளைகளில் கவிஞர் என்றழைக்கப்பட்டாலும் பல மேடைகளில் அவரை ‚சாராய முதலாளி“ என்று விழிக்கின்றார்கள். ஆனால் அதை மறுதலித்து இதுவரையும் அவர் எந்த அறிக்கையையும் விடவில்லை. ‚மௌனம் சம்மதம்‘– மூன்றாமவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அடுத்தவர் தமிழ்நாடு மாநில கம்யுனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா ஆகியோர் உள்ளனர்.
ஊழல் ஆட்சியை பல வருடங்களாக நடத்தியதன் மூலம், தனது குடும்பத்தின் வாரிசுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பெருமதியான சொத்துக்களை வாரி வழங்கிய கலஞர் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் தேர்தல் மேடைகளில் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
2009ம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அரசு இந்தியாவின் பெருந்துணையோடு நடத்திக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்தது கலைஞர் தலைமயிலான அரசு. மத்தியின் திமுக ஆதரவோடு கூடிய காங்கிரஸ் ஆட்சி. ஆனால் ஈழத்தில் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட போது, கலைஞர் தனது மனச்சாட்சிக்கு விரோமான கருத்துக்களை சொல்லியபடியே ஆட்சியைத் தொடர்ந்தார்.
இணையத் தளங்களில் வரும் தமிழர் அழிப்பு தொடர்பான புகைப்படங்களை தங்கள் பத்திரிகைகளில் பிரசுரம் செய்த பல பத்திரிகை அலுவலகங்களுக்கு அழைத்த கலைஞர் கருணாநிதி, அதன் பிரதம ஆசிரியர்களிடம் “ ஒங்களுக்கெல்லாம் வேற செய்திகள் கிடைக்கல்லையா? இதெல்லாம் இனிமே நீங்க போடக்கூடாது. நீங்க கேக்கலையேன்னா தமிழ்நாட்டு விளம்பரம் மத்திய அரசின் விளம்பரம் இரண்டுமே நிறுத்தப்படும்“ என்று எச்சரித்தாராம்.
அதற்கு பின்னர் ஈழப்படுகொலை செய்திகளை தமிழ்நாட்டின் எந்தப் தினசரிப் பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை.
கலைஞர் ஈழத் தமிழ் மக்களுக்கு மட்டும் பாதகம் செய்ய வில்லை. தமிழ்நாட்டில் அவரைவிட படைப்பிலக்கியத்துறையில் வித்தகர்களாக விளங்கிய பல அறிஞர் பெருமக்களுக்கு செய்த அநியாயங்கள் பல. தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளராக விளங்கிய காலஞ்சென்ற ‚பிரபஞ்சன்‘ தனது ஈழத்து இலக்கிய நண்பர்களோடு பகிர்ந்து கொண்ட தகவல் இது
ஒரு தடவை பிரான்ஸ் நாட்டின் அரசு அங்குள்ள பல்கலைக் கழகம் ஒன்றின் கூடாக தமிழ் மொழியில் வெளிவந்த அரிய நூல்களை பிரன்சு மொழியில் மொழிபெயர்த்த நூல்களாக வெளியிடும் தனது எண்ணத்தை தமிழ்நாட்டு அரசிற்கு அறிவித்ததாம்.
அப்போது முதலமைச்சராக விளங்கிய கலைஞருக்கு இந்தத் தகவல் சொலலப்பட்டதாம். உடனே அவரும் இதற்காக ஒரு தெரிவிக்குழுவை நியமியுங்கள் என்று தனது அதிகாரிகளுக்கு உ த்தரவிட்டாராம். ஆனால் திரை மறைவில் தனக்கு சார்பான சிலரை அந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளும் படி பணித்தாராம்.
சில தடவைகள் கூடிய ஆலோசித்த அந்த குழு உறுப்பினர்கள் ஒரு நாள் மிகுந்த ஆர்வத்துடன் இறுதிக் கூட்டத்தில் பங்கெடுக்கச் சென்றார்களாம். அன்றுதான் யார் யாரின் றூல்கள் தேர்ந்தெடுக்கபட்டன என்ற அறிவிப்பு வெளியாக இருந்தது.
அதற்கு கலைஞர் கருணாநிதியும் சமூகமளித்திருந்தாராம்.
அ ந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பிரபஞ்சன் போன்ற சில எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்தார்களாம். தங்கள் நூல்களுக்கும் சந்தர்ப்ப்ங்கள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு.
கடைசியில் நூல்களின் விபரங்கள் அறிவிக்கப்படுகின்றது என்றதும், அந்தக் குழுவில் கலைஞருக்கு மிக வேண்டிய ஒரு உறுப்பினர் எழுந்து நின்று சொன்னாராம்‘ „எங்கள் கலைஞரே ஏராளமான நூல்களை எழுதியிருக்கின்றார்.எனவே இந்த தடவை அவரதுநூல்களையே இந்தக் குழு சிபார்சு செய்கின்றது“ என்றாராம் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்த கலைஞர் மறுப்பேதும் கூறாமல் இருக்க, மற்றவர்கள் மனம் வெந்தவர்களாக அந்த அறையை விட்டு வெளியே வந்தார்களாம்
இதிலிருந்த கலைஞரைப் பற்றி அங்கு புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்களாம். இந்த வாய்ப்பை தங்களுக்கு வழங்கிவிட்டு கலைஞர் தனது சொந்தச் செலவில் தனது நூல்களை பிரசுரித்திருக்கலாமே? “ என்று
கலைஞரின் கபடத்தனத்திற்கு உதாரணமாக ஆயிரம் உண்மைக் கதைகள் உள்ளன.
அடுத்து காணப்படும் இரண்டு படங்கள் திருமாவளவன் மற்றும் டி. ராஜா ஆகியோரது. இவர்கள் இருவரது கட்சிகள் அன்றும் இன்றும் என்றும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பங்காளிக் கட்சிகள். 2009ம் ஆண்டு மகிந்த அரசாங்கம் நிகழ்த்திய இனப்படுகொலையின் பின்னர் திமுகவின் பாராளு மன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை மகிந்தா இலங்கைக் கு அழைத்திருந்தார். அதில் சாராயம் தயாரிக்கும் கனிமொழி, தலைவர் பிரபாகரனை போன்று வேடமிட்டு மதுரையில் கட்அவுட்கள் கட்டிய திருமாவளவன் ஆகியோரும் கொழும்பு சென்றிருந்தார்கள். திருமாளவன் விரும்பியோ அல்லது யோசித்தோ செயற்பட்டிருந்தால் அந்தக் குழுவில் செல்லாமல் தவிர்த்திருக்கலாம்.
ஆனாலும், அவருக்கு மகிந்தாவிடமிருந்த பரிசைப் பெற விருப்பம் இருந்திருக்கின்றது.
ஆனால் மகிந்தா அந்தக் குழுவை சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த போது, திருமாவளவனைப் பார்த்து கூறினாராம் “ அன்று பிரபாகரனோடு திருமாளவளவன் இருந்திருந்தால் எனது இராணு|வம் இவரையும் கொன்றிருக்கும்“ என்றாராம். அப்போது பதிலேதும் கூறாமல் முகத்தில் அசடு வழிய இருந்தாராம் இந்த வாய்வீச்சு வீரன் ‚திருமா‘
இந்த வீடியோ பதிவு இன்னும் ஒளிப்படங்களாக உள்ளது.
இனி இந்தத் 2021 தேர்தலுக்;கு வருவோம்.
இந்தத் தேர்தலில் திருமாளவனனின் விடுதலைச் சிறுத்தைகள், டி. ராஜாவின் தமிழ்நாடு மாநில கம்யுனிஸ்ட் கட்சி ஆகியன திமுக- காங்கிரஸ கூட்டணியில் அங்கத்தவக் கட்சிகள். 2009ம் ஆண்டு தமிழ் மக்களை அழிக்க துணைநின்ற இந்தக் கூட்டணியோடு ஏன் திருமாவளனும் கம்யுனிஸ்ட் டி ராஜாவும் பங்காளர்களாக இருக்க வேண்டும். அதே கொலைக் கரங்களுக்கு ஆதரவாகவும் பங்காளிக் கட்சிகளாவும் இருந்து கொண்டு நீங்கள் எப்படி ஈழத்தமிழ் மக்களின் அரசியல் மற்றும் வாழ்வியல் நலன்களை பாதுகாப்பீர்கள்.
இந்த கேள்விகளை தமிழ்நாட்டில் தனது கேள்விகளாக முன்வைப்பவர் சீமான் ஒருவரே ஆவார். வேறு எவருமே இந்த க் கேள்விகளை முன்வைக்க மாட்டார்கள். இதைப் போன்றே வை. கோ போன்ற பச்சோந்திகளும் நடந்து கொள்கின்றார்கள். எனவே தான் ஈழத்திலிருந்து ஒரு மடல் இன்று எழுதப்படுகின்றது. இதற்கு திருமாவளவனும், டி. ராஜாவும் என்ன சொல்லப்போகின்றார்கள். என்று பார்ப்போம்.
ஒரு கம்யுனிஸ்டுக்;கு இருக்க வேண்டிய மிடுக்க சீமானிடம் உள்ளது. ஆனால் கம்யுனிஸ்ட் தலைவர் டி. ராஜா ஒரு பூர்சுவா??
—————————————–
யாழ்ப்பாணத்திலிரு;நது விசாசன்
+2
1
Like

Comment
Share