செவ்வாய்க் கிரகத்தில் நிலநடுக்கம்! கண்டுபிடித்தனர் நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகத்தில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.பூமியைப் போன்று செவ்வாயில் நிலத்தடித் தட்டுக்கள் இல்லை என்றாலும் எரிமலை வெடிப்பினால் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய இன்சைட் என்ற ஆய்வூர்தி நடத்திய சோதனையில் அங்கு இருமுறை நில அதிர்வு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள செர்பரஸ் ஃபோஸே என்ற இடத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகள் முறையே 3 புள்ளி 3 மற்றும் 3 புள்ளி ஒன்று ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இரு நில அதிர்வுகளுக்குப் பின்னர் சிறிதும் பெரிதுமாக 500 முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும் நாசா கூறியுள்ளது.