சூயஸ் கால்வாய்யை அடைத்து நிற்கும் இராட்சத கப்பல்! உலக அளவில் பொருளாதாரம் பாதிப்பு!
சூயஸ் (Suez) கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து, எகிப்து கப்பல்கள் அனைத்தையும் அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ள நிலையில் ,கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள்அதிகரித்துள்ளதினால் கப்பல் வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடும்சிரமங்களுக்கு இடையே கால்வாயை அடைத்துக்கொண்டு நிற்கும் கப்பலை அங்கிருந்து அகற்றி வெளியேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது . இருப்பினும் அதற்க்கு பல வாரங்கள் பிடிக்கலாம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
எனவே மற்றைய கப்பல்களை மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடுவதைத் தவிர வேறுவழி இல்லை என்று கூறப்படுகிறது.கப்பல் அங்கு சிக்கியிருப்பதால் பொருள்களின் ஏற்றுமதி இறக்குமதியும் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.உலக வர்த்தகத்தில் சுமார் 12 விழுக்காட்டுப் பொருள்கள் சூயஸ் கால்வாயின் வழியாகச் செல்கின்றமை குறிப்பிடத்தது.