November 24, 2024

புகலிடம் கோருவோருவோருக்கான சட்டங்களை இறுக்கும் பிரித்தானியா

அரசியல் தஞ்சம் கோருவோர் சட்டவிரோதமாக வந்தால் இங்கிலாந்தில் தங்குவதை மிகவும் கடினமாக்கும் திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருகிறது.அகதிகளாக பாதுகாப்பைத் தேடும் மக்கள், அவர்கள் இங்கிலாந்திற்கு எவ்வாறு வருகிறார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களின் அரசியல் தஞ்சம் கோரல் மதிப்பீடு செய்வார்கள்.

உள்துறை செயலாளர் பிரிதி படேல் கூறுகையில்,

புதிய திட்டங்கள் சிறந்ததாக இருக்கும். மேலும் குற்றவியல் கும்பல்களின் செயற்பாடுகளை புதிய திட்டங்கள் தகர்த்துவிடும் எ்ன்றார்.

திட்டங்களின் கீழ், புகலிடம் கோருவதற்காக சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழையும் நபர்களுக்கு சட்டப்பூர்வமாக வருபவர்களுக்கு அதே உரிமைகள் இனி இருக்காது.

இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக குடியேறுவதன் முயற்சியால் அதிக உயிர்கள் ஆபத்திற்குச் செல்கிறது. அத்துடன் குற்றத்திற்கு தூண்டுகிறது என்றார்.

புதிய நடவடிக்கைகள் மக்களுக்கு மீள்குடியேற்ற வாய்ப்பளிக்கும் வகையில் பாதுகாப்பான மற்றும் சட்ட வழிகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

போலியான வாக்குமூலங்கள் மற்றும் நாட்டில் இருக்கக் கூடாத நபர்களை அகற்றுவதில் சட்டரீதியான அணுகுமுறைகள் அடைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

புதிய முறை துன்புறுத்தல்களில் இருந்து தப்பி ஓடும் மக்களுக்கு, உலகின் பயங்கரமான பகுதிகளில் மோசமான முகாம்களில் சிக்கித் தவிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் போன்றவர்களுக்கு புகலிடம் அளிக்கும் என்று அவர் கூறினார்.