யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் முன்சன் நகரங்களில் இடம்பெற்ற போராட்டங்கள்
இன்று 20.3.2021 சனிக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெற்றது. ஐ.நாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரினில்
மீண்டும் சிறிலங்கா அரசை ஐ.நா. சபைக்குள் வைத்து தீர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு இருக்கின்ற வேளையில் ஈழத்தமிழ் மக்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்து விரக்த்தியின் விளிம்பில் நிக்கின்றனர்.இந்த வேளையில் யேர்மனிய அரசை ஈழத்தமிழ்மக்களின் துயரங்களை மனதிற் கொண்டு இனப்படுகொலை செய்த, செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசினை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு பரிந்துரைகள் செய்யவேண்டும் என்று கேட்டு. கொரோனா கிருமியின் மூன்றாவது அலை ஆரம்பமாகி மக்களை முடங்கவைத்துள்ள இந்த வேளையிலும் அதன் சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் கலந்துகொண்டு தமது கோசங்களை எழுப்பி உரிமை கோரினர்.
அதேவேளை இந்தவேண்டுகோள் அடங்கிய மனு மின்னஞ்சல் மூலம் பாடன்வூட்டன்பேர்க் வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சமநேரத்தில் முன்சன் நகரத்திலும் கொரோனா விதிமுறைகளுக்கு ட்பட்டு முன்சன்வாழ் தமிழீழமக்களால் கடும் குளிருக்கு மத்தியிலும் இவ் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது.