März 28, 2025

அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனியிலும் போராட்டங்கள்

அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யேர்மனி பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில்

போராட்டங்கள் நடைபெற்றிருந்தன.அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் யேர்மன் தலைநகர் பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் சாகும்வரை உண்ணா நிலைப் போராட்டத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் அம்பிகை அம்மாவுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு,

ஈழத்தமிழர்களைக் கூட்டுச்சதி ஊடாக இனப்படுகொலை செய்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது! தமிழினம் புத்திக் கூர்மையுடன் தொடர்ந்து போராடவேண்டிய அவசியம் இருக்கின்றது. ஆகவே அம்பிகையம்மா தன் உண்ணாநிலை அறப்போராட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழினம் இளந்த உயிர்கள் அனைத்தையும் பயனுள்ளதாக்கிக்கொள்வதற்கு வேகம் கொண்டவர்களும் புத்திஜீவிகளும் தொடர்ந்து போராடவேண்டியிருக்கின்றது. எமது இளைய சமுதாயதிற்கு பல உண்மைகளை எடுத்துக்காட்ட வேண்டியிருக்கின்றது. ஆகவே அம்பிகை அம்மாவை எழுந்து வரும்படி அழைக்கின்றோம்.