திருந்தாத கூட்டம்: பேரணியில் தள்ளுமுள்ளு!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி
முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கும் தமது மலின அரசியலை அரங்கேற்றியுள்ளனர் முன்னணியினரும் கூட்டமைப்பின் ஆதரவாளர்களும்.குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணியாக, சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக செல்ல முன்னதாக திலீபன் தூபி பகுதியில் அஞ்சலி செலுத்த தயாரானது.
முன்னதாக போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மதத்தலைவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களை முன்னிற்கிருந்து பின்தள்ளிய கும்பல் ஜநா பூச்சிய வரைபை ஏற்றுக்கொண்டு அறிக்கையை பல்கலைக்கழக மாணவர்கள் விடுக்கவுள்ளதாக கூக்குரல் எழுப்பினர்.
ஆனாலும் மாணவர்களால் அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையில் ஏதும் அவ்வாறு உள்ளடங்கியிருக்கவில்லை.
ஒரு கட்டத்தில் முன்னணி கும்பலிற்கும் தமிழரசு ஆதரவாளர்களிற்கும் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் வார்த்தை பிரயோகங்கள் தெறித்து வீழ்ந்தது.
இந்நிலையில் தமிழரசின் தலைவர்கள் மற்றும் சி.வி.விக்கினேஸ்வரன் தரப்புக்கள் மெதுவாக ஆர்ப்பாட்டத்திலிருந்து கழன்று கொள்ள மாணவர்கள் செய்வதறியாது திண்டாடினர்.
முன்னதாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியினையும் இதே தரப்புக்களே முடிவுறும் போது குழப்ப முற்பட்டதும் மக்கள் எதிர்ப்பினால் அம்முயற்சி பிசுபிசுத்துப்போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.