நானே நானே அனைத்தும் நானே :டக்ளஸ்
அண்மையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பணிகளை அநுராதபுரம் அலுவலகத்திற்கு பாரப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தீ்ர்மானத்தினை நானே தடுத்து நிறுத்தியிருந்தேன். ஆனால், குறித்த தீர்மானம் தமது போராட்டத்தினால் நிறுத்தப்பட்டது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்த சில தரப்புக்கள் முயற்சிக்கின்றன என தெரிவித்துள்ளார் அரச அமைச்சரான டக்ளஸ்.
அத்துடன் சேவல் கூவிப் பொழுது விடிந்ததில்லை என்று தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களே பிரச்சினைகள் தொடர்வதற்கு காரணம் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாது என்ற என்பது கடந்த காலங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மீளக்குடியமர்த்தப்படாத பலாலி மற்றும் மயிலிட்டிப் பிரதேச மக்களை சந்தித்த போது, தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களினால் இந்தியப் படைகள் திருப்பி அனுப்பப்பட்டமையே தங்களுடைய இன்றைய நிலைக்கு காரணம் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
ஆயினும் யாழ்ப்பாண அலுவலக இடமாற்றத்தை ஏன் தடுக்கமுடியவில்லையென்பது பற்றி டக்ளஸ் விளக்கமளித்திருக்கவில்லை.