டக்ளஸே வேண்டும்:சுமா,கஜேந்திரன்கள் அழைப்பாம்?
யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வழிமொழிந்துள்ளனராம்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்றவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொள்ளவேண்டும் அப்போதுதான் அங்குள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் பேசுவதற்கான சுமூகமான சூழல் உருவாகும் என்று நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததாகவும் டக்ளஸ் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்பு கூட்டம் இன்று (05) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இணைத்தலைவர்களான கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும்;, வடமாகாண ஆளுனர் திருமதி சார்ள்ஸ்; தலைமையில் நடைபெற்றிருந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டபோதே மேற்படி கோரிக்கையை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே யாழ்.மாவட்ட குழு கூட்டம் நாடாளுமன்ற குழுக்களது தலைவர் அங்கயன் இராமநாதன் தலைமையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.