கோரானா தொற்றாளர்களின் புதைகுழி இரணைதீவில்?
இரணைதீவினை கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களது புதைகுழி பூமியாக்க இலங்கை அரசு திட்டமிட்டு;ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர்களது பூர்வீக மண்ணான இரணைதீவை இலங்கை கடற்படை 30வருடங்களிற்கு மேலாக ஆக்கிரமித்துள்ளது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களது உடலங்களை புதைப்பதற்கான அனுமதியை வழங்குவதாக அறிவித்துள்ள இலங்கை அரசு அதற்கு இரணைதீவை தெரிவுசெய்துள்ளதாக ஊடக பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அண்மையிலேயே இரணைதீவை கடலட்டை வளர்ப்பதற்கான மையமாக டக்ளஸ் அறிவிக்க கோத்தபாயவோ சடலங்களை அடக்கம் செய்யும் பிரதேசமாக அறிவித்துள்ளார்.