முதல் திட்டம் எசல பெரஹராவாம்?
சஹ்ரான் ஹாசீமின் முதலாவது இலக்கு, கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற எசல பெரஹராவாகுமென கோத்தபாய அரசு புதிய கண்டுபிடிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த பெரஹா மீதே, தாக்குதல்களை நடத்துவதற்கு சஹ்ரான் முதலாவதாக திட்டமிட்டிருந்தார் என புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனாலேயே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் முதலாவது திட்டம் தவறிவிட்டது என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிவிக்கையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், 2019 ஜனவரி 16ஆம் திகதியன்று வனாத்தவில்லு பிரதேசத்தில் பெருந்தொகையில் வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அந்த சம்பவத்துடன் சஹ்ரானுக்கு தொடர்பு உள்ளது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் கத்தோலிக்கர்களை இலக்கு வைத்தே ஈஸ்ரர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் புதிய தகவல்கள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.