மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது
மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது.கடந்த ஜனவரி 13ம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் Johor பகுதியின் Teluk Ramunia, Kota Tinggi கடல் பகுதியில் படகில் சட்டவிரோத குடியேறிகள் ஏற்றப்படுவது கண்டறியப்பட்டிருக்கிறது.
அதே சமயம், அருகாமையிலிருந்த வனப்பகுதியில் மறைந்திருந்த 55 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட பெரும்பாலானோர் இந்தோனேசியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேடுதல் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட அனைத்து குடியேறிகளும் குடிவரவுத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாக கொரொனா தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.