Mai 12, 2025

ஒரு நிமிடத்தில் 4கோடி பறந்தது?

மோட்டார் பைக்கில் வந்த இரண்டு பேர் நேற்று கம்பாஹாவின் மரிஸ்வத்தாவில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 40 மில்லியன் மதிப்புள்ள பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.

இரண்டு ஆண்கள் தங்களை ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுகளால் மூடி மறைத்த வண்ணம் நேற்று மதியம் 2 மணியளவில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் பணத்தையும் நகையினையும் கொள்ளையடித்துள்ளனர்.

39 மில்லியன் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஒரு மில்லியன் ரொக்கம் சந்தேக நபர்களால் பறிக்கப்பட்டுள்ளது.