தம்மிக்க பாணி தமிழ் பகுதிக்கும் வருமாம்?
கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சிறந்த மருந்தாக மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், கிராமசேவையாளர் வலையமைப்பினை பயன்படுத்தி தனது சிரப் மருந்தை இலங்கை தீவு முழுவதும் விற்க ஒரு பொறிமுறையை அமைக்குமாறு பாணி மருத்துவர் தம்மிக்க அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
சிரப்பைத் தேடி அவரது இல்லத்தில் மக்கள் திரண்டு வருவதால் தான் சிரமத்தை எதிர்கொள்கிறேன் என்றும் தம்மிக்க பண்டாரா கூறுகிறார்.
இலங்கை துறைமுக ஆணையம் ஏற்கனவே அவரது சிரப்பின் பெரும்பகுதியை வாங்கியிருந்ததுடன், இலங்கை விமான நிறுவன தொழிற்சங்கம் ஒன்றியம் தானும் வாங்குவதன் மூலம் சிரமமின்றி தங்கள் உறுப்பினர்களுக்கு சிரப்பை வழங்க வசதியை வழங்கியுள்ளதாம்.
தம்மிக்க பண்டாரா தனது பேஸ்புக் பக்கத்தில் தனது இரண்டு முக்கிய சவால்கள் தொடர்பில் தெரிவித்துள்ளார்.அதில் தனது இல்லத்தை சுற்றி மக்கள் நெரிசலில்லாமல் இருக்குமாறான கோரிக்கையை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், தனது உற்பத்தியை விற்பனை செய்வதற்கு அரசாங்க பொறிமுறையை அனுமதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என்று அவர் கூறினார்.