Mai 20, 2024

முன்னர் தலதாமாளிகை:தற்போது கிளிநொச்சி?

கிளிநொச்சியிலுள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலுள்ள புத்தர் சிலை தாக்கப்பட்டமை சிங்கள மாணவர்களிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டதன் பின்னராக விகாரையிலிருந்த புத்தர் சிலை தாக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட வளாகத்தில் சகல மதத்தவர்களுக்குமான  வழிபாட்டு தலங்கள் அமைக்க   பல்கலைககழக நிர்வாகம் அனுமதித்து அங்கு சிங்கள மாணவர்கள் பலரின் உதவியுடன் அழகான விகாரையை அமைத்து வழிபடுகின்ற நிலையில் விகாரையிலிருந்த புத்தர் சிலை தாக்கப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டு யாழ்;.குடாநாடு இலங்கை படைகளால் கைப்பற்றப்பட்டது முதல் மாவீரர் துயிலுமில்லங்கள் இடித்தழிக்கப்பட்டதும் அதன் எதிரொலியாக தலதா மாளிகை இடித்தழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.