November 22, 2024

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கினை முடக்கிய இந்தியர்!

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வானார். இவர்கள் இருவரும் வரும் 20 ஆம் தேதி முறைப்படி பதவியேற்கவிருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

இதனிடையே பைடனின் வெற்றியை உறுதி செய்யும்பொருட்டு தேர்தல் சபை தேர்வாளர்கள் அளித்த வாக்குகள் நாடாளுமன்றத்தில் எண்ணப்பட்டு, பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு நடந்தது.

அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர்.

இதனால், ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பெண், ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

உலகையே அதிரவைத்த இந்த நாடாளுமன்ற வன்முறைக்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரது சமூக வலைதளங்கள் அனைத்து முடக்கப்பட்டது. குறிப்பாக ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.

ட்ரம்பின் கணக்கு முடக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது ட்விட்டர் கணக்குகளை பல்வேறு பயனர்கள் புறக்கணித்து வருகின்றனர். ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்க நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய பெண், விஜயா கடே என்ற அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார்.

இந்தியாவில் பிறந்த விஜயா கடே தனக்கு 3 வயது இருக்கும்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடிபெயர்ந்தார்.

தொடர்ந்து கார்னெல் பல்கலைகழகத்தில் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை பட்டமும், நியூயார்க் பல்கலைகழகத்தில் சட்ட படிப்பையும் முடித்துள்ளார்.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ட்விட்டர் நிறுவனத்தில் தலைமை வழக்கறிஞராகவும், பி.ஆர் நிர்வாகக் குழுவின் முக்கிய உறுப்பினராகவும் பணியாற்றிவருகிறார்.

ட்விட்டரின் நிர்வாகக் குழுவில் ஒரே பெண்மணியாக இருந்ததால் இவர் பார்ச்சூன் என அழைக்கப்பட்டார்.