நடிகர் கமல் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் சின்னம் இது தான்: 234 தொகுதிகளிலும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை துவங்கப்பட்டுவிட்டது என்றே கூறலாம். ஏனெனில் அந்தளவிற்கு அதிமுக ஒரு பக்கம், திமுக ஒரு பக்கம் என தேர்தல் பரப்புரையை இப்போதே துவங்கிவிட்டனர்.
இதற்கிடையில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுவிட வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், முதல் முறையாக இந்த சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவுள்ளது.
இதற்கான பரப்புரையில் கமலும் இறங்கிவிட்டார். ஆனால், அவருடைய டார்ச் லைட் சின்னத்திற்கு சிறு பிரச்சனை இருந்தது. இந்த டார்ச் லைட் சின்னத்தை வேறொரு கட்சியினர் பதிவு செய்திருந்ததாக கூறப்பட்டது.
அதன் பின் அந்த கட்சியை சேர்ந்த நபர் வாபஸ் வாங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து தற்போது நடிகர் கமல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.