தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை இலங்கை வரலாற்றில் மிகவும் வெட்கப்பட வேண்டிய வரலாறு!பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கை வரலாற்றில் மிகவும் வெட்கப்பட வேண்டிய வரலாறாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை காணப்படுகிறது. ஆனால் நினைவுத்தூபி ஆனது அவசியமானது. இறந்த மக்களின் உறவுகள் தமது துக்கத்தை வெளிப்படுத்த கட்டப்பட்டதே இந்த நினைவுத் தூபி ஆகும். இதுவும் இலங்கை அரசின் கொடுமையான செயற்பாடாகும். சிறுபான்மை இனமான தமிழ் மக்களை இல்லாமல் ஆக்கும் அவர்களின் செயற்பாடாகும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உங்களைப் போலவே நானும் யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவத்தை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன்.
மக்களுக்கு கூறுவது போல இது ஒரு நிர்வாகத்தின் கடமை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு அரசியல் பின்னணியில் நடத்தப்பட்ட கபட நாடகம். குறிப்பாக இந்த தமிழ் மக்களின் நினைவுகூருவதை தடுப்பதே இதன் பிரதானமாகும். அங்குள்ள தமிழ் மாணவர்கள் தனது உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்கள்.
அவர்களது உரிமையை பெற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு எனது முழு ஆதரவு உள்ளது. நான் உறுதி அளிக்கிறேன் எங்கள் தமிழ் மக்களுக்கு நாங்கள் என்றும் துணை நிற்போம்.
வன்முறைகளால் மற்றும் காட்டுமிராண்டித்தனமான இனவாத மற்றும் ஒரு அரச பிரதிநிதிகள் மரணத்திற்கு எதிராக நான் பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இது தொடர்பாக இலங்கை அரசிடம் விளக்கம் கூற வேண்டும் என்றும் ,அதிலும் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இறந்த மக்கள் மற்றும் போராளிகள் நினைவுகூர இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தேன்.
2009 ஆம் ஆண்டு எமது அப்போதைய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இலங்கையில் பொதுமக்கள் யுத்தத்தில் கொலை செய்யப்பட்டதற்காக தமது முழு எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆகையால் நான் எமது அரசு தனது கடமையை சரிவர செய்யும் என்று நம்புகின்றேன் நன்று என்றும் கூறியுள்ளார்.